Thursday, 15 September 2011

முக்தி கிடைக்க முருகன்!

பக்திக்கும், முக்திக்கும் மூலதனம் முருகன். அவனை வழிபடுவதும் மிக... மிக... எளிது. முருகா என ஒருமுறை உங்கள் உள்ளம் உருக சொல்லிப்பாருங்கள். கையில் வேல் ஏந்தி, மயிலின் மீது அமர்ந்து உங்களுக்காக வந்து விடுவான். உங்கள் கூக்குரலை கேட்பான். உங்கள் கோரிக்கை நியாயமானதாக இருந்தால் அதை நிறைவேற்றிக் கொடுப்பான் என் அப்பன் முருகன்!
எப்படியோ பிறந்தோம். எதற்கோ ஒடுகிறோம். எதுவும் நமக்கு கிடைக்கப்போவதும் இல்லை. அப்படி கிடைத்தது எதுவும் நிலைக்கப்போவதுமில்லை. சஞ்சலம்... குழப்பம்... தடுமாற்றம்... ஆசை....இப்படி எத்தனையோ உணர்ச்சிகள். இதை கட்டுப்படுத்த ஒரே வழி பாவச்செயலில் ஈடுபடாதீர்கள். அடுத்த மார்க்கம் முருகனை கெட்டியாக, இறுகப்பிடித்துக்கொள்ளுங்கள். இதற்குபிறகு நீங்களே ஆசைப்பட்டாலும் முருகனை விடமுடியாது.
இனி என்ன.... முதலில் பக்தி கிடைக்கும். பிறகு,  ‘தான்’ என்ற சிறையில் இருந்து வெளியேறி தத்துவ ஞானியாக மாறுவீர்கள். அதற்கு பிறகு முக்தியை மட்டுமே உங்கள் மனம் தேடும். இறுதியில் நமக்கு பேரின்பம் கண்டிப்பாக கிடைக்கும். நான் அதற்கான வழியில் ஈடுபட்டிருக்கிறேன். ஆனால் இன்னும் வெற்றி கிடைக்கவில்லை.